Advertisment

மீனாட்சி கல்வி குழுமத் தலைவர் மரணம்; பொதுமக்கள் இரங்கல்

மீனாட்சி கல்வி குழுமத் தலைவர் ஏ.என். இராதாகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dina Ethal morning daily news paper founder passes away

மீனாட்சி கல்வி குழுமங்களின் தலைவரும் தின இதழ் காலை நாளிதழ் நிறுவனருமான ஏ.என். இராதாகிருஷ்ணன்

மீனாட்சி கல்வி குழுமத் தலைவர் ஏ.என். இராதாகிருஷ்ணன் இன்று காலமானார்.

Advertisment

1991ஆம் ஆண்டில் மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி உத்திரமேரூரில் தொடங்கப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு மத்தியரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தகுதி வழங்கப்பட்டது.

இதன் வேந்தராக ஏ.என். இராதாகிருஷ்ணனும், துணைவேந்தராக டி. குணசாகரனும் உள்ளனர்.

அதோடு, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சென்னை மதுரவாயலில் மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி, கே. கே. நகரில் மீனாட்சி பொறியியல் கல்லூரி, மாங்காட்டில் மீனாட்சி செவிலியர் கல்லூரி, மற்றும் பொறியியல் மற்றும் தொழிநுட்பத் துறை, எம்.ஜி.ஆர் கேட்டாரிங் கல்லூரி ,தின இதழ் நாளிதழ் உடன் மீனாட்சி தொலைக்காட்சியையும் ஏ என் ராதாகிருஷ்னன் திறம்பட நடத்தி வந்தார்.

இந்நிலையில், மீனாட்சி பல்கலைக்கழகம் வேந்தரும் மீனாட்சி கல்வி குழுமத்தின் தலைவருமான ஏ.என். இராதாகிருஷ்ணன் இன்று (டிச.3) சென்னையில் இயற்கையெய்தினார்.

அவருக்கு மனைவி இரு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment