scorecardresearch

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Tamil Nadu News Today Live
Tamil Nadu News Today Live

மதுரையில் தினகரன் அலுவலகத்தை எரித்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தினகரன் அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில் தீர்ப்பு

இதனை எதிர்த்து சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய 17 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dinakaran office attack case verdict high court madurai bench

Best of Express