/indian-express-tamil/media/media_files/2025/11/01/dindigul-c-sreenivasan-on-ka-sengottaiyan-madurai-press-meet-tamil-news-2025-11-01-17-19-31.jpg)
"முதலமைச்சராகும் வாய்ப்பு ஒருவருக்கு வந்தால் யாராவது அதை விட்டுக் கொடுப்பார்களா? அந்த வாய்ப்பு கிடைத்தது தெய்வத்தின் தீர்ப்பு. அதை விட வேண்டிய அவசியமே இல்லை." என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். அவரது அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக, ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் இன்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மதுரையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடையே பேசுகையில், "செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் பிறந்தவர் என்பதே அவருடைய ஒரே தகுதி. அதற்கும் மேலான தகுதிகள் எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு.
முதலமைச்சராகும் வாய்ப்பு ஒருவருக்கு வந்தால் யாராவது அதை விட்டுக் கொடுப்பார்களா? அந்த வாய்ப்பு கிடைத்தது தெய்வத்தின் தீர்ப்பு. அதை விட வேண்டிய அவசியமே இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கொடநாடு வழக்கு நடந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுத்திருக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் சட்டப்படி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர். சசிகலா மற்றும் மூன்று பேருக்கும் ஒரு மாதத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பாருங்கள்.
யாரும் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை; செங்கோட்டையனை இனி கட்சியில் சேர்க்க முடியாது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன் உடன் இருக்கும் தொண்டர்கள் மன்னிப்பு கேட்டால் ஆலோசித்து பார்க்கலாம். இவர்கள் யாராலும் அ.தி.மு.க-வுக்கு எந்த பலவீனமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முதல் கோணல் முற்றிலும் கோணல். செங்கோட்டையன் ஒருகாலத்தில் அதிமுகவில் ராஜாவாக இருந்தார்; ஆனால் இன்று கூஜா தூக்கி வருபவராக தாழ்ந்திருக்கிறார்,” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us