திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி (45) . இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு D.கூடலூரை சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது.
கணவரிடம் இருந்து பிரிந்து அந்தப் பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலுபாரதி பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாலுபாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“