Dindugal: திண்டுக்கல் - பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியில் பயிலும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் அ.ம.மு.க பிரமுகரும், கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“