அதிமுக கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், “புரட்சித் தலைவர் அண்ணாமலை எனத் தெரிவித்தார்.
அதாவது செய்தியாளர் சிஏஏ சட்டம் குறித்து அதிமுகவின் கருத்து என்ன என அவரிடம் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், “இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எங்களின் புரட்சித் தலைவருமான அண்ணாமலை ஏற்கனவே அறிக்கை வாயிலாக பதிலளிதது விட்டார்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.
இந்தத் தேர்தலை அதிமுக தனித்து சந்திக்கிறது. திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக உடனான கூட்டணிகள் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“