திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசின் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், ’தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால், கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்’ என்றார்.

அதோடு மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தின.
