அரசு ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது - தீண்டாமை ஒழிப்பு முன்னணி

இந்த சம்பவம் நடந்திருக்கும் இடம் நகராட்சி ஆணையர் அலுவலகம், அது ஆணையர் அலுவலகமா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமா என எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த சம்பவம் நடந்திருக்கும் இடம் நகராட்சி ஆணையர் அலுவலகம், அது ஆணையர் அலுவலகமா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமா என எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

author-image
WebDesk
New Update
protest dindivanam

இந்த சம்பவம் நடந்திருக்கும் இடம் நகராட்சி ஆணையர் அலுவலகம், அது ஆணையர் அலுவலகமா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமா என எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல்துறை சாக்குபோக்கு சொல்லாமல் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisment

ஒரு அரசு ஊழியர் அரசு அலுவலகத்தில் கேவலமாக, இழிவான முறையில் நடத்தப்பட்டுள்ளார், அதனை கண்டித்து தான் சிபிஎம் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டத்தை  நடத்துகிறோம்.

ஒரு அரசு அலுவலகத்திலேயே ஜாதிய வன்கொடுமை அரங்கேறி இருப்பது சுதந்திரம் பெற்று 79- ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தியாவில் ஒரு கேவலமான விஷயமாக நாங்கள் பார்க்கிறோம்.

ஒரு அரசு இளநிலை ஊழியரை இங்கு நகராட்சி நகர்மன்ற தலைவராக இருப்பவர், அலுவலக மேலாளர், நகர்மன்ற தலைவரின் கணவர்,வார்டு உறுப்பினர் ரம்யா, அவரது கணவர் ஆகியோர் இணைந்து அந்த இளநிலை ஊழியரை மிகக் கேவலமான முறையில் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த ஒரு இழிவான செயலை செய்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த சம்பவம் நடந்திருக்கும் இடம் நகராட்சி ஆணையர் அலுவலகம், அது ஆணையர் அலுவலகமா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமா என எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

இது போன்ற ஒரு பழைய கோப்புகளை தேடும் போது கிடைக்கவில்லை என்று சொன்னால், அவரும் மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த கோப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். இயல்பாகவே ஒரு மனிதனுக்கு கோப்பை காணவில்லை என்றால் ஒரு கோபம் வரும், அதில் அவர் பதில் அளித்து இருக்கலாம், அதற்கு நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பதிலளிக்க அவருக்கு கடிதம் கொடுத்திருக்கலாம், அதற்கு அவரிடம் இருந்து விளக்கம் பெற்று துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இருக்கலாம், அதைப்பற்றி எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை, அதை விட்டுவிட்டு கவுன்சிலர் என்றால் கடவுள் மாதிரி என்று பெரிய மனிதர்கள் மாதிரி அவர்களே தண்டனை கொடுத்திருப்பது இந்த நூற்றாண்டில் நாங்கள் இதனை இழிவாக கருதுகிறோம், வன்மையாக கண்டிக்கிறோம். 

இதனைப் பொறுத்த வரைக்கும் இந்த நகராட்சி ஆணையர் ஒரு புகார் மனு கொடுத்திருக்க வேண்டும் ஏனென்றால் இந்த சம்பவம் அவருடைய அலுவலக அறையில் நடந்திருக்கிறது, ஆணையர் அலுவலகம் வரவில்லையென்றால் அந்த அலுவலக அறை ஏன் திறந்து இருக்கிறது, அந்த அலுவலக அறையில் ஏன் ஒரு கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.

இதில் இன்னும் சொல்லப்போனால் ஆணையரே குற்றவாளி, ஏனென்றால் அவர் அலுவலக அறையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது, அவர்தான் சேர்மன் கணவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யா, கவுன்சிலர் கணவர் மரூர் ராஜா, மேனேஜர் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் மீது மட்டுமே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது ஆனால் இந்த சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டு உள்ளனர், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து எஃப் ஐ ஆர் போட வேண்டும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் சாதாரண சட்டம் கிடையாது, காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டு குற்றவாளிகளை காணவில்லை என எங்களிடம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள், இது மாதிரி ஆயிரம் கதைகளை நாங்கள் கேட்டிருக்கின்றோம், அவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

ஏதோ சாக்குபோக்கு சொல்லி காவல்துறை, அவர்கள் உடனே வெளிவர வழிவகை செய்யக்கூடாது, மிகவும் வலுவான கண்டனங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்து, அவர்களை ஜாமினில் வெளி வரவிட முடியாத அளவில் இந்த வழக்கை வலுவாக இந்த திண்டிவனம் காவல்துறை கொண்டு செல்ல வேண்டும், என நாங்கள் வலியுறுத்துகின்றோம்,

சமூக நீதியென்று பேசும் தி.மு.க ஆட்சியிலே பல்வேறு சமூக நீதி அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறார் முதலமைச்சர், இந்த அறிவிப்பெல்லாம் சமூகத்திற்கு மட்டும் தானா, உங்கள் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு கிடையாதா, உங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கவுன்சிலர்களுக்கு, சேர்மேன்களுக்கு, எம்எல்ஏ-களுக்கு, எம்.பி -களுக்கு இது கிடையாதா, பல்வேறு இடங்களில் இவர்கள் ஜாதிய வன்கொடுமைகளை பிரயோகிப்பவர்களாக இருக்கிறார்கள், நீங்கள் பேசும் சமூக நீதி என்பது இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல உங்களுடைய திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை உணர்த்தும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கு இருக்கிறது. அதையும் தலைமை கண்காணிக்க வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது என்பதை நாங்கள் இந்த சமயத்தில் கேட்டுக்கொள்கிறோம். 

பாதிக்கப்பட்ட முனியப்பன் வழக்கு பதிவு செய்ய மூன்று நாட்கள் முயற்சி செய்தும் காவல்துறை அந்த வழக்கை எடுக்கவில்லை, ஆனால் அதன் பிறகே காவல்துறை வழக்கு எடுத்துள்ளது, ஆனால் கவுன்சிலர் ரம்யா உண்மையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் மூன்று நாட்களுக்கு முன்பே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தனே,
 பாதிக்கப்பட்ட முனியப்பன் புகார் கொடுத்த பின்னர் இவர் வழக்கு கொடுக்கிறார் என்பதை பார்த்தால் இது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை உறுதியாக சொல்லுகிறோம்.ஏன் புகார் கொடுக்கல, பாதிக்கப்பட்ட அவர் புகார் கொடுத்து அந்த வீடியோ தமிழ்நாடு முழுக்க வைரலான பிறகு இது ஒரு புதுசா ஒரு கதை கட்டுறாங்க, அது உண்மையாக இருந்தால் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது மாநில செயலாளர் வாஞ்சிநாதன், கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன், செயலாளர் எம்.கே.முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: