Advertisment

ஜெயலலிதாவை விட சூப்பராக ஆட்சி செய்கிறார் எடப்பாடி! - பற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பான ஆட்சி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதாவை விட சூப்பராக ஆட்சி செய்கிறார் எடப்பாடி! - பற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் ஜெயலலிதா கொடுத்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிஉள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பின், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா ஆட்சியை விட இப்போதைய ஆட்சி பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தால் உடனே அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவார். முதல்வர் பழனிச்சாமியோ அதை படித்துபார்த்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தூங்க கூடமுடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களை எல்லாம் முதல்வர் பழனிச்சாமி வேலை வாங்குகிறார். முதல்வர் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. அதற்காக அவர் படும் அவஸ்தைகள் அதிகம்.

ஒரு வருடத்திற்கு மேலாக இந்த ஆட்சியை திறமையாக நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி நடத்துவதில் எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று தனி ஸ்டைல் உள்ளது. அந்த ஸ்டைலை இனிமேல் யாரும் பின்பற்ற முடியாது. ’’ என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவின் மாபெரும் தலைவராக, முதல்வராக அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பதை, அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.

அமைச்சரின் இந்த கருத்தை சோஷியல் மீடியாக்களில் பலரும் விமர்சித்து, கலாய்த்தும் வருகின்றனர்.

Minister Dindugal Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment