/tamil-ie/media/media_files/uploads/2018/12/a147.jpg)
விழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்... சப்போர்ட் கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா மேடையில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது பரபரப்பான கருத்தை கூறி சிக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். அவர், பழனியில் நடைபெற்ற பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். தூக்கமின்மை காரணமோ என்னவோ, விழா மேடையில் அவர் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
அதை ஒருபக்கம் கேமராக்கள் ஃபோகஸ் செய்துக் கொண்டிருக்க, விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வினய்யும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி வழிந்தார்.
அரசு விழாவில் மேடையிலேயே தூங்கிவிழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் ஆட்சியர் வினய் ! #DindigulSrinivasanpic.twitter.com/UMJ0omGwjd
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 17 December 2018
பணிச்சுமையின் காரணமாகவே இவர்கள் அயர்ந்து தூங்கியதாக கூறப்பட்டாலும், கேமராக்கள் நம்மை கவனிக்கின்றன, அதன் மூலம் மக்கள் நம்மை பார்ப்பார்கள் என்பது தெரிந்தும், இப்படி அரசு விழாவிலேயே அமைச்சரும், ஆட்சியரும் தூங்கியது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.