Advertisment

17 மாவட்ட சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம்: பதிவுத்துறை தலைவர் உத்தரவு

திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Dinesh Ponraj Oliver Inspector General of Registrations 17 dist Sub Registrars transfered Tamil News

திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு; 

Advertisment

தமிழகத்தில், சார் பதிவாளர்களுக்கு பொது மாறுதல் வழங்குவது, சில ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, சார் பதிவாளர்கள் சொந்த காரணங்களுக்காக, விரும்பிய ஊர்களுக்கு, இடமாறுதல் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து, தற்போது அரசின் அனுமதியுடன், சொந்த காரணங்கள் அடிப்படையில், இடமாறுதல் வழங்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதன்படி, ஏற்கனவே, 19 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்; திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

Advertisment
Advertisement

ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், பெரியநாயக்கன்பாளையம் தற்காலிக இணை சார்பதிவாளர் ரமேஷ் கிருஷ்ணகிரி நிர்வாக சார்பதிவாளராகவும், கோபிசெட்டிபாளையம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் தமிழ்செல்வி பாளையங்கோட்டை வழிகாட்டி சார்பதிவாளராகவும், கீழ்ப்பழுர் சார்பதிவாளர் சேசோபா அரியலூர் 1 எண் இணை சார்பதிவாளராகவும், நாகலூர் சார்பதிவாளர் அண்ணாதுரை பெரம்பலூர் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூண்டி சார்பதிவளர் வாசுதேவன் சென்னை துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலக ஆழ்ந்த சீராய்வு சார்பதிவாளராகவும், தருமபுரி 2 எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் மாரண்டஹள்ளி சார்பதிவாளராகவும், பாளையங்கோட்டை முறப்பநாடு சார்பதிவாளர் கண்ணன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும் காஞ்சிபுரம் 4 எண் இணைசார்பதிவாளர் நெடுஞ்செழியன் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பல்லாவரம் சார்பதிவாளர் அறிவழகன் புதுக்கோட்டை நிர்வாக சார்பதிவாளராகவும், வேலகவுண்டம்பட்டி சார்பதிவாளர் அருள்குமார் கரூர் அசல் பத்திரப்பதிவு கண்காணிப்பாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும், அருப்புக்கோட்டை சார்பதிவாளர் மாலினி ஜெயஸ்ரீ மதுரை தெற்கு புலனாய்வு சார்பதிவாளராகவும், தென்காசி 2 எண் இணை சார்பதிவாளர் மதிவாணன் சேத்தூர் சார்பதிவாளராகவும், பெரியகுளம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் சோபனா செங்கல்பட்டு தலைவர் அலுவலக நிர்வாக சார்பதிவாளராகவும், செய்யூர் சார்பதிவாளர் பசுமதி மயிலாடுதுறை சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கண்டவாறு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Registration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment