மதுரை-அபுதாபிக்கு நேரடி விமான சேவை: ஜூன் 13 முதல் வாரத்தில் 3 நாட்கள் இயக்க ஏற்பாடு

மதுரையில் இருந்து அபுதாபிக்கு தனியார் விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நேரடி விமான சேவையை ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மதுரையில் இருந்து அபுதாபிக்கு தனியார் விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நேரடி விமான சேவையை ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai Airport to operate 24 hours  from oct 1 Tamil News

ஜூன் 13 முதல் மதுரை-அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை

மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதனிடையே, தனியார் விமான நிறுவனம் ஒன்று மதுரை - அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் 3 நாட்கள் புதிய விமான சேவையை தொடங்க இருக்கிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரையிலிருந்து அபுதாபிக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் புதிய விமானம் இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Advertisment

இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு மதுரை வருகிறது. பயணிகளின் ஆதரவை பொறுத்து, கூடுதல் நாட்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: