இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீரேன மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மனோஜ் ஒரு மாதத்திற்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மனோஜ் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் நடிகை ரியா சென்னுடன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அர்ஜுனா என பல படங்களில் நடித்த மனோஜ், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.