எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டிராஜ் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும், “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள்.
please ...🙏 பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது, அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இந்த நிலையில், விஜயகாந்த் உடல் நலம் பெற்றதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
அப்போது, பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“