கிரிக்கெட் வீரருடன் இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்: வண்ணப் படங்கள்

Director Shankar’s daughter Aishwarya to marry Cricketer Rohit: இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம்; தமிழ்நாடு முதல்வரின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள்

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

இயக்குனர் ஷங்கர் இந்தியன் அந்நியன், எந்திரன், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. மருத்துவரான இவருக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்று திருமணம் நடைபெற்றது.

மணமகனின் தந்தை தாமோதரன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். மணமகன் ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியில் கேப்டனாக உள்ளார்.

ஐஸ்வர்யா- ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையை ஷங்கர் படங்களின் ஆர்ட் டைரக்டர் முத்து ராஜ் அமைத்துள்ளார்.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். சரியாக காலை 11.15 க்கு மணமகன் மணமகள் கழுத்தில்  திருமாங்கல்யம்  அணிவித்தார்.

இந்த திருமண நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Wedding Reception) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Director shankars daughter aishwarya to marry cricketer rohit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com