10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழக கல்வித்துறை சமீப காலமாக அதிரடியான பல முடிவுகளை எடுத்து வருகிறது. தமிழ் வழியில் பயின்று வரும் மாணவ மாணவிகள், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகையையும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி முகாமும் நடத்தப்பட்ட்டு வருகின்றன. இந்நிலையில், 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேரடி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் பழைய திட்டத்தின்படி தேர்வெழுத மார்ச் 2019 தேர்வுதான் கடைசி என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.