நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு குறைந்த அளவிலே சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ஆத்தரமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் மொத்தமாகவுள்ள 65 வார்டுகளில், சுமார் 20 வார்டுகளை ஒதுக்கீட காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், திமுக காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5 சீட் மட்டுமே ஒதுக்கீயதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக திமுக அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலுயுறுத்திய நிலையிலும், வார்டு இடஒதுக்கீடை 5 என்ற அளவில் முடித்துவிட்டதாக தெரிகிறது.
திமுக இடஒதுக்கீட்டை கட்சி தலைமை ஏற்றுக்கொண்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தனர். குறைவான சீட் ஒதுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அளவிலான தலைவர்களே போட்டியிடுவதால், உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது அவர்களை மேலும் கோபமடைய செய்தது.
புதன்கிழமை அன்று, கட்சி நிர்வாகிகள் சிலர், தலைவர்களை பார்க்க அருணாச்சல மன்றத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு கட்சி தலைவர்கள் யாரும் இல்லை. மற்ற உறுப்பினர்களும் தேர்தல் பணிக்காக வெளியே சென்றதால், கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வெளியே கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் இல்லாததை கண்டித்து, கட்சி அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜவகர், விரைந்த வந்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil