ஐஐடி மெட்ராஸ்க்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன் ?

மனிதவளத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய ஐஐடி மெட்ராஸ் சேர்மன்...

ஐஐடி மெட்ராஸ் : இந்தியாவில் 10 தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் தந்து, உலக அரங்கில் சிறப்பான கல்வி மையங்களாக உருமாற்றம் செய்ய விரும்பியது மத்திய அரசு.

அதற்கு இந்தியாவில் இருக்கும் கல்வி மையங்கள் பற்றிய பட்டியலை தயார் செய்து ஜூலை மாதம் அறிவித்தது மனிதவளத்துறை அமைச்சகம். அதில் க்ரீன்ஃபீல்ட் பல்கலைக்கழகமான ஜியோ பல்கலைக்கழகம் பெயர் இருந்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஐஐடி மெட்ராஸ் குறித்து கடிதம் எழுதிய சேர்மென்

ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மென் பவன் கோயென்கா, தன்னுடைய போர்ட் மெம்பர்களிடம் பேசி, ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்திற்கு ஏன் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கேட்டு தன்னுடைய வருத்தத்தை கடிதமாக எழுதியிருக்கிறார்.

மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு அந்த கடிதத்தை, அங்கீகாரம் பெறப் போகும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியான ஒரு வாரத்தில் அனுப்பி வைத்திருக்கிறார் பவன்.

மத்திய பல்கலைக் கழக மானியக்குழுவால் உருவாக்கப்பட்ட எம்பவர்ட் எக்ஸ்பெர்ட் கமிட்டி இந்த பட்டியலை தயார் செய்தது. தங்களின் கல்வி நிறுவனங்களை பட்டியலில் இணைக்கக் கோரி 114 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் 11 கல்வி நிறுவங்களை மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது அக்கமிட்டி.

அதில் இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் (IISc), ஐஐடி – மெட்ராஸ், ஐஐடி – காரக்பூர், ஐஐடி – பாம்பாய், ஐஐடி – டெல்லி, டெல்லி பல்கலைக் கழகம், ஜதவ்பூர் பல்கலைக் கழகம், மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் போன்ற அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதே போல் தனியார் நிறுவனங்களில் பிட்ஸ் பிலானி, மணிப்பால் அகாடெமி, ஜியோ கல்வி நிறுவனம் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன.

ஆனால் அதில் ஆறு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டு அவைகளின் பெயர்களை அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்திருப்பதாக பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் EECயின் பட்டியலை National Institute Ranking Framework (NIRF) கொண்டு ஏன் தயாரிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஐஐடி மெட்ராஸ் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக தொடர்ந்து 3 வருடங்கள் அறிவித்திருந்தது NIRF என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தரத்தில் 2017 மற்றும் 2018ம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது ஐஐடி மெட்ராஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் கோயன்கா. மேலும் தங்களின் நிறுவனம் இந்த பட்டியலில் இடம் பெறாதது எங்களின் துரதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மனிதவளத் துறை அமைச்சகத்தின் இம்முடிவு மாணவர்கள் மற்றும் பேராசியர்களை அதிக அளவில் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கார்.

இந்த பட்டியலில் தங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என பல்வேறு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானாலும் ஐஐடி மெட்ராஸ் மட்டுமே தங்களின் கருத்தினை வெளிப்படையாக கூறியிருக்கிறது. இது குறித்து பவனிடம் கருத்து கேட்ட போது அவரிடம் இருந்து முறையாக பதில் எதுவும் வரவில்லை. ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் கேள்விகள் மின்னஞ்சல் அனுப்பிய போதும் அவரிடம் இருந்து முறையாக பதில்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close