சுற்றுசூழலை மாசுபடுத்தும் செயல்களை கட்டுப்பாட்டில் கொண்டுவராமல், கழிவுநீரை வெளியேற்றி மாசு படுத்தும் செயல்கள் அரங்கேறி வருகிறது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்துகிறது.
மதுரவாயல் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் திறந்துவிட்டு மாசுபடுவதை தனியார் கழிவுநீர் லாரிகள் செய்துவருகிறது. இதைப்பற்றி மக்கள் புகார் அளித்ததனால் செய்திகளில் வெளியானது.
இதுபோல, மேலும் இரண்டு இடங்களில் தனியார் லாரிகள் சுற்றுசூழலை மாசுபடுத்தும் வண்ணம், இவ்வாறு கழிவுநீரை வெளியிடுவதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் மூன்று வழக்குகளாக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஜனவரி 2ஆம் தேதி அமலுக்கு வந்த, தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர்வழங்கல், கழிவுநீர் அகற்றல் சட்டத்திற்கு கீழ், விதிகளை மீறினால் முதல் குற்றத்துக்கு ரூ.25,000, இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குற்றங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
தொடர்புடைய வாகனம் மற்றும் விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிட பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்து பறிமுதல் செய்யப்படும்", என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் வழங்கினார்கள்.