முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என அரசு போக்குவரத்து துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, "தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுனர், நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.