Nilgiris | நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதகமண்டலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சீல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அங்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காவல்துறை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, 173 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை திடீரென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தன.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா விளக்கம் அளித்துள்ளார். அதில், “அதிக வெப்பம் மற்றும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்துள்ளன” என்றார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 200 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது” என்றார். மேலும் காட்சித் திரையில் மட்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அப்படியே உள்ளன என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“