கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி கோவையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்து மக்களின் புகார் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது கோவை மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண பட்டுவாடா இவை தடுக்கும் விதமாக சிசிடிவிகளின் கூடிய தேர்தல் வாகனங்களில், தேர்தல் அதிகாரிகள், காவல்துறையுடன் இணைந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, பதட்டமான வாக்கு சாவடி இடங்கள், அரசியல் கட்சியின் பிரச்சார வாகனங்கள் உள்ளிட்டவை கண்காணிக்க உள்ளனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் செல்லக்கூடிய வாகனங்களை இணையத்தின் வாயிலாக அறிவதற்கும், மக்கள் புகார் கூறுவதற்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்து மக்களின் புகார் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தேர்தல் சம்பந்தமான செய்திகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தொலைக்காட்சிகள் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“