Advertisment

'தனபாலை முதல்வராக்க அ.தி.மு.க தலித் எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு': உடைத்துப் பேசிய சசிகலா தம்பி திவாகரன்

“4 வருடத்திற்கு முன் அப்போதைய சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்குவதற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதிமுக பட்டியலின எம்.எல்.ஏக்களே எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Divakaran Sasikala Brother Speak about ADMK Crisis EPS OPS Dalit CM Tamil News

'மக்களா எதிர்ப்பு தெரிவித்தார்கள்? அவர்கள் கட்சியில் (அ.தி.மு.க) தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே, இது குறித்து அவர்கள் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்று திருமாவளவன் கூறினார்.

புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த சசிகலாவின் தம்பி திவாகரன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறுகையில், "தலித் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தலித் எம்.எல்.ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி, முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், 35 தலித் எம்.எல்.ஏ-க்கள் அதற்கு ஒத்துவரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும். வரும் 2026 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க ஒருங்கிணைப்பு நடந்து விடும். 

தி.மு.க ஒன்றிய அரசோடு 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பாதிக்கப்படுவது மக்கள் தான். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் என்னைப் போன்ற கல்வியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடிக்கு அட்வைஸ் செய்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர். எடப்பாடி பழனிசாமி உள்ளடக்கிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தான் நடக்கும்" என்றார்.

இந்நிலையில், திவாகரனின் இந்த பேச்சு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், 'மக்களா எதிர்ப்பு தெரிவித்தார்கள்? அவர்கள் கட்சியில் (அ.தி.மு.க) தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே, இது குறித்து அவர்கள் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். 

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment