/tamil-ie/media/media_files/uploads/2020/09/Divya-Sathyaraj-against-Rath-Yatra-2020-during-covid-19-pandemic.jpg)
திவ்யா சத்யராஜ்
கொரோனா காலத்தில் தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதித்தால், நோய் பரவல் இன்னும் அதிகமாகும் என்பதால், தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
Tamil News Today Live: தமிழகத்தில் அனுமதி பெறாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதோடு, உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதில் நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை, என ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.