Diwali 2019 1000 temporary firecrackers shops : சென்னை முழுவதும் 1000 இடங்களில் பட்டாசுக் கடைகள் வைக்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க 1200 கடை உரிமையாளர்கள் விண்ணப்பம் வைத்தனர். அந்த 1200 இடங்களையும் சோதனையிட்டு ஆராய்ந்த பிறகு 820 கடைகளுக்கு பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கப்பட்டது. 25 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 255 விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
250 என்.ஓ.சிகள் இன்னும் வழங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் சென்னையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் தற்போது 65 தற்காலிக பட்டாசுக் கடைகள் இயங்கி வருகிறது.
நிபந்தனைகள்
பட்டாசு கடைகள் வைப்பதற்கு சில நிர்பந்தங்கள் வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விளக்குகள், கேஸ் லைட்கள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. மின்சார விளக்குகள் கடையின் சுவற்றிலோ, சீலிங்கிலோ மாட்டியிருக்க வேண்டும். அதற்கான சுவிட்ச்கள் நிரந்தரமாக சுவற்றில் பொறுத்திய வண்ணம் இருக்க வேண்டும். மொத்த கடைக்கான மாஸ்டர் சுவிட்ச் அந்த கையில் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது சென்னை காவல்துறை.
மேலும் படிக்க : பசுமை பட்டாசு… இந்த தீபாவளிக்கு இதைத்தான் நீங்கள் வெடிக்க வேண்டும்!