மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை மக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் வகையில் அரசு, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி போனல் வழங்கப்படும். அந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தீபாவளி போனல் அறிவித்தது.
இந்நிலையில், தமிழக அரசு முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகளில் முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Non-Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ – சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“