கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் கருணைத் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“