Advertisment

நல்லிணக்கம், அமைதியை தீபாவளி வாரி வழங்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
happy diwali, happy deepawali, diwali celebration, cm edappadi palainswami diwali wish, pm modi diwali wishes, தீபாவளி வாழ்த்து, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, தீபாவளி, leaders diwali wishes, happy diwalil wishes, தீபாவளி கொண்டாட்டம், தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தீப ஒளி திருநாள் என்றும் தீபாவளி என்றும் நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் தீப ஒளி ஏற்றுமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த தீபாவளி திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது. இந்த தீபாவளி திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

தீப ஒளியால் தமிழக மக்களின் மனங்களிலும், வாழ்விலும் உள்ள இருள் நீங்கி, மகிழ்வுடனும், செழிப்புடனும் வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் புதிய நம்பிக்கையோடு எழுவோம்; நம்முடைய தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமூகமும் பயன் பெறுகிற வகையில் வெல்வோம். அத்தகைய வெற்றிகளைக் குவிப்பதற்கு தீப ஒளித்திருநாள் வழிகாட்டட்டும். ” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Narendra Modi Diwali Edappadi K Palaniswami Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment