மதுரையில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம்: செப். 20 கடைசி நாள்

வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008, பிரிவு 84-ன் கீழ் இந்த உரிமம் வழங்கப்படும். விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வழியாக, செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Crackers

Diwali crackers license Madurai

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர், தற்காலிக உரிமம் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisment

வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008, பிரிவு 84-ன் கீழ் இந்த உரிமம் வழங்கப்படும். விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வழியாக, செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

கடை வரைபடம்

கிரய ஆவணங்கள்

உரிமக் கட்டணம் ரூ. 600 அரசுக் கணக்கில் செலுத்திய அசல் ரசீது

முகவரி சான்று

உள்ளாட்சி ரசீது

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: