தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு ஏ.சி. பஸ்சில் செல்ல ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது என்று பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பலரும் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துக்கின்றனர். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் லட்சக் கணக்கான பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இருப்பினும், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு சென்னையில் இருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தனியார் ஏ.சி பஸ்சில் ரூ.1.500 முதல் ரூ.2,000 வரை அதிக கட்டனம் வசூலிப்பதாக பயணிகள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதே போல, கோவை, மதுரை, உள்ளிட்ட நகரங்களிலும் இதெ போல அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அம்பத்தூர் மற்றும் சிவகங்கையில் அதிக கட்டணம் வசூலித்ததாக 2 பேருந்துகள் மாநகரில் பறிமுதல் செய்து தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது அரசு போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகை அல்லாத காலங்களில் ரூ.600 முதல் ரூ.800 வரை இருக்கும் பஸ் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு அடுத்து வெள்ளி, சனி ஞாயிறு ஆகியவை வார இறுதி நாட்களாக இருப்பதால் தொடர் விடுமுறையாக உள்ளதால் தனியார் பஸ்களில் டிக்கெட் விலை மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார்கள். மக்கள் சௌகரியமாகவும் வேகமாகவும் பயணம் செய்ய விரும்புவதால், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமை பயணத்திற்கான இருக்கைகள் வேகமாக பதிவு செய்யப்படுவதாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் காட்டுகின்றன.
கோயம்புத்தூர்-சென்னை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் தனியார் சிலர் டிக்கெட் விலையை ரூ.2,400 ஆக உயர்த்தியுள்ளனர். ஏசி இல்லாத ஸ்லீப்பர் டிக்கெட் ரூ.1500க்கு குறையாமல் விற்கப்படுவதாக தனியார் பஸ் பயணிகள் கூறுகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு செல்ல சில பஸ்களில் ரூ.2,400 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. கூடுதலாக 800 ரூபாய் செலவு செய்தால் ஃபிளைட்டில் அதைவிட வேகமாகவும் சௌகரியமாகவும் சென்றுவிடலாம் என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7) தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு விமானத்தில் முன்பதிவு செய்ய முயற்சித்தேன். காலையில் விமானம் இருப்பதால், திங்கட்கிழமை காலை விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். பஸ் டிக்கெட் கிட்டத்தட்ட விமான டிக்கெட்டுக்கு நிகராக விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறினார்.
தேவைக்கேற்ப விலைவாசி உயர்கிறது என்றும் அந்த மாதிரிதான் பஸ் டிக்கெட்டில் லாபம் ஈட்டுவதாகவும் தனியார் பேருந்து நடத்துனர்கள் கூறுகின்றனர்.
அதிக கட்டணம் வசூலித்தால், பேருந்து நடத்துனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநில போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், விதிகளை திருத்தாமல் செயல்பட அரசுக்கு அதிகாரம் இருக்காது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், சாலை அனுமதி மற்றும் வரி விதிப்பு மீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு எந்தெந்த ஊர்களுக்கு எங்கே இருந்து பேருந்துகள் கிடைக்கும் என்பது அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் பேருந்துகள் செல்லும்.
தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து திண்டிவனம், தஞ்சாவூர், பண்ருட்டி, கும்பகோணம் மற்றும் விக்கிரவாண்டிக்கு பேருந்துகள் செல்லும்.
தாம்பரம் ரயில் நிலையம்: சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, காட்டுமன்னார்கோவில், போளூர், வந்தவாசி, நெய்வேலி, வடலூர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும்.
கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள் செல்லும்.
தாம்பரம் ரயில் நிலையம்: சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, காட்டுமன்னார்கோவில், போளூர், வந்தவாசி, நெய்வேலி, வடலூர் மற்றும் அதற்கு அப்பால் செல்லும் பேருந்துகள்.
கே.கே.நகர் பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
சென்னையில் பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்பு இணைப்புப் பேருந்துகளை MTC ஏற்பாடு செய்து வருகிறது. பயணிகள் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TNSTC, SETC மற்றும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல வெளிவட்டச் சாலையில் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தை அடையும். வழக்கம் போல் SETC பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக வண்டலூரை சென்றடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.
அதேபோல், கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக வண்டலூருக்குச் செல்ல வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது. ECR நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சி.எம்.ஆர்.எல்., ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன்னால் ஏறும் இடங்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்தில் இருந்து ஏற்றிச் செல்லலாம். அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“