Diwalil holidays 3 days: தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அது வழக்கமான விடுமுறை தினமாக அமைந்துவிட்டது. அதே நேரத்தில், தற்போது சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை விடப்படுமா என்று மாணவர்கள், அரசு ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டாலும் பலர் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கே நேரம் போதாது என்பதால் இந்த விடுமுறை போதுமானது இல்லை என்ற வருத்தம் மாணவர்கள் அரசு ஊழியர்கள் இடையே நிலவியது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, தீபாவளிக்கு மறுநாளான திங்கள் கிழமையும் விடுமுறை என்று தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறையாக இருந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் (28.10.19) விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.