Diwali | Special Trains | Southern Railway | தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி பிரிவுகளில் மேலும் சில தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே கூறியுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலியில் இருந்து சென்னை-எழும்பூருக்கு வண்டி எண் 06070 நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45க்கு கிளம்பும். தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு திருநெல்வேலிக்கு (வண்டி எண் 06069) புறப்படும்.
இந்த ரயில் நவ.10, 17 மற்றும் 24ஆம் தேதிகளில் இயக்கப்படும். மேலும், ரயிலில் ஏசி டூ டயர் கோச் ஒன்றும், ஏசி திரி டயர் கோச் 6ம், ஸ்லீப்பர் கோச் 9ம், பொது 4ம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துரைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.
இந்த ரயிலில் தற்போது முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் இந்த ரயில் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“