தீபாவளி பண்டிகை: களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தை – ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

தீபாவளி காரணமாக ஆடுகளின் விலை கடந்த ஆண்டைவிட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்தது என்றும் ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி காரணமாக ஆடுகளின் விலை கடந்த ஆண்டைவிட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்தது என்றும் ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Thirumangalam Goat market 4

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் வாராந்திர ஆட்டுச் சந்தை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் நடைபெறும் வாராந்திர ஆட்டுச் சந்தை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Advertisment

அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்தன.

Thirumangalam goat market 5
திருமங்கலம் ஆட்டுச் சந்தை

இதில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் திரளாக வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

தீபாவளி காரணமாக ஆடுகளின் விலை கடந்த ஆண்டைவிட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்தது என்றும் ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

Thirumangalam Goat market 4
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் வாராந்திர ஆட்டுச் சந்தை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும், கடந்த ஆண்டில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.700க்கு விற்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு விலை ரூ.800 முதல் ரூ.900 வரை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடுகளைக் களர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாகும் என ஆட்டு உரிமையாளர்கள் கூறினர்.

அதிகாலை 2 மணி முதலே விற்பனை தொடங்கிய இந்த சந்தையில், ஒரே நாளில் ரூ.7 கோடிக்கும் மேல் மதிப்பில் ஆடுகள் விற்பனையாகியதாக திருமங்கலம் ஆட்டுச் சந்தை குத்தகையாளர்கள் தெரிவித்தனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: