தீபாவளி தொடர் விடுமுறை: இவர்களுக்கு மின்வாரியம் அறிவித்த குட்நியூஸ்

தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக அபராதத் தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கூடுதல் தொகை திருப்பி வழங்கப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக அபராதத் தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கூடுதல் தொகை திருப்பி வழங்கப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tangedco to organise name-transfer mela across Tamilnadu Tamil News

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட வசதியாக  நவ. 11,12,13-ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த தேதிகளில் மின் கட்டணம் செலுத்த கடைசி தேதியாக இருந்த பயனர்கள் செவ்வாய்க்கிழமை அபராத தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. 

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக மின் வாரியம் அறிவித்த அறிவிப்பில், நவ. 11,12,13-ம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட பயனர்கள் மறு நாள் அபராத தொகையுடன்  கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும். அதாவது, அடுத்த மின் கட்டணத்தில் இந்த கூடுதல் தொகை சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Advertisment
Advertisements

 

Tangedco

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: