தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 27ம் தேதி ஒருநாள் லீவு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தீப ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை, அக்டோபர் 27ம் தேதி, நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் என எல்லோரும் மனதிலும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்க, பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பு பேரிடியாக விழுந்தது.
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வருவது வெளியூர்களில் பணியாற்றுபவர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு முந்தைய தினமான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கள் கிழமையும் வேலை நாள்களாக அறிவித்துள்ளது. எனவே ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் வெளியூர்களுக்குச் செல்ல திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
தீபாவளிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறுப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கப்பட்டது. இதனால் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையைவிட தீபாவளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வணிகர் சங்க கூட்டமைப்பு அமைச்சரிடம் மனு : பண்டிகைக்காக விடப்படும் விடுமுறை நாள்களைப் பொறுத்தே பண்டிகைகால வியாபாரங்கள் இருக்கும். அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறைவிடக் கோரி தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பு சார்பாக சிவகாசியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “வணிகா்கள், கல்லூரி மாணவா்கள், வெளியூரில் பணிபுரிவோா், அரசு ஊழியா்கள் மற்றும் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ, வரும் தீபாவளி பண்டிகைக்கு, அக்டோபா் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வரின் கையில் முடிவு : தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் விடுமுறை போதாது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கை முதல்வர் பழனிசாமியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறினார்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை, திபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று விடுமுறை என அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.