தீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

Diwali Special Bus Booking Ticket: பண்டிகை என்றாலே, எந்த அளவுக்கு நம் மனதில் மகிழ்ச்சி வருமோ, அதற்கு சற்றும் குறையாத பீதியும் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளுக்கு. சென்னையில் மாநகரத்தை விட்டு வெளியே வருவது என்பது, அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ரயில்,…

By: Updated: October 22, 2019, 12:51:20 PM

Diwali Special Bus Booking Ticket: பண்டிகை என்றாலே, எந்த அளவுக்கு நம் மனதில் மகிழ்ச்சி வருமோ, அதற்கு சற்றும் குறையாத பீதியும் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளுக்கு. சென்னையில் மாநகரத்தை விட்டு வெளியே வருவது என்பது, அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ரயில், பேருந்து, விமானம் ஆகிய மூன்று போக்குவரத்துத் துறை இருந்தும், பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது பேருந்தைத் தான். ரயிலில் இடம்பிடிக்க போட்டா போட்டி நடக்கும் என்பதால், பலரும் அந்த பக்கம் செல்வதையே தவிர்த்து, ‘எப்படியும் பஸ்ஸு வுடுவாய்ங்க… பார்த்துப்போம்’ என்று இருந்து விடுவார்கள்.


ஆனால், பேருந்தில் செல்வது என்பதும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதுவும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், எப்போது பார்த்தாலும் சென்னையில் நச நச வென்று மழை பெய்த நிலையிலேயே உள்ளது. (விடுய்யா.. இப்பயாவது பெய்யட்டும் என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது)

ரைட்.. விஷயத்துக்கு வருவோம்.

Deepavali Special Bus Booking Ticket

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

சென்னை கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் கேகே நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – தீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

வரும் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தினசரி இயக்க கூடிய 2225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 4265 பேருந்துகள் என மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Diwali Special Buses – உங்கள் ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம்?

ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம் பேட்டில் இருந்து இயக்கப்படும். 5 பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்கு போதிய அளவில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருந்து அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல் வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று, அங்கு தாங்கள் முன் பதிவு செய்த நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்யலாம்.

Diwali Special Bus Booking : கட்டுப்பாட்டு அறை

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்கள் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வர ஏதுவாக, வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மொத்தம் 13,527 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள அல்லது புகார் தெரிவிப்பதற்கு 9445014450 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத் தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் புக்கிங்

கணினி மூலமாக உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுன்ட்டர்கள் உள்பட 30 கவுன்ட்டர்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Diwali special bus reservation deepavali special bus booking tnstc redbus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X