Chennai News Updates: ரஜினிகாந்த்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ், ரவீந்திரநாத்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OPS OPR Rajini

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சிறப்புபேருந்துகள்இயக்கம்: தீபாவளிபண்டிகையைமுன்னிட்டுதமிழ்நாடுமுழுவதும்இன்றுமுதல் 4 நாட்களுக்குசிறப்புபேருந்துகள்இயக்கப்படுகிறது. சென்னையில்இருந்துவழக்கமாகஇயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 760 சிறப்புபேருந்துகளும், பல்வேறுஇடங்களிலிருந்து 565 பேருந்துகளும்இயக்கப்படஉள்ளன.

  • Oct 17, 2025 05:10 IST

    வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி சிறையில் திடீர் மரணம்; திண்டுக்கல்லில் பரபரப்பு

    பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான வர்கீஸ் என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று (அக்டோபர் 16, 2025) கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் அவர் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் மரணம் குறித்து சிறைத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 16, 2025 21:25 IST

    ரஜினிகாந்த்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ், ரவீந்திரநாத்

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் நடிகர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Oct 16, 2025 20:42 IST

    தீபாவளி: ஸ்தம்பித்தது சென்னை போக்குவரத்து: சொந்த ஊர் செல்வோர் பெரும் அவதி

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், சென்னை நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் இன்று (நாள்/தேதி குறிப்பிடவும்) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் முக்கிய வெளியேறும் சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழிந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    கோயம்பேடு - மதுரவாயல் வழித்தடம், வானகரம் - மதுரவாயல் இணைப்புச் சாலை, தாம்பரம் புறவழிச் சாலை ஆகிய வழித்தடங்கள் மட்டுமின்றி, வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கார்கள் செல்லும் அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், பயணிகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.



  • Oct 16, 2025 19:50 IST

    கடலூர்: வேப்பூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



  • Oct 16, 2025 19:17 IST

    கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக பனையூர் அலுவலகத்துக்கு விஜய் வருகை

    கரூர் கூட்ட நெரிசல் துயரத்திற்குப் பிறகு முதல் முறையாக பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்துள்ளார். நேற்று ஜாமினில் வெளியே வந்த நிர்வாகிகள் மதியழகன், பவுன் ராஜ் இருவரும் விஜயை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 16, 2025 18:53 IST

    திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

     சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றைய தினம் எர்ணாகுளம்-தன்பாத் ரெயிலில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போட்டிப்போட்டு இடங்களை பிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் பலர் ஏறி பயணம் செய்தது தொடர்பான வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.



  • Oct 16, 2025 18:28 IST

    கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் மனு

    கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் ஃபரீதா நவாபை தகுதி நீக்கம் செய்யக் கோரி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கூறி நகராட்சி ஆணையரிடம் 23 கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.



  • Oct 16, 2025 18:20 IST

    கடலூர்: வேப்பூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய நிலத்தில் களை எடுக்கும்போது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கடலூரில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.



  • Oct 16, 2025 18:10 IST

    கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு: பா.ஜ.க

    4.5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. காலம் தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா? அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது. எது உண்மையென்று பதில் சொல்லுங்கள், முதல்வர் ஸ்டாலின் அவர்களே! என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



  • Oct 16, 2025 18:03 IST

    பேரவைக்கே சட்டம் இயற்றும் அதிகாரம் சொந்தம்: ஸ்டாலின்

    தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேரவைக்கே சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது, ``சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது’’ என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 16, 2025 18:02 IST

    கச்சத்தீவு மீட்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இந்தியாவுக்கு வருகைதந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்டுத் தர வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கச்சத்தீவு மீட்பு, இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை பிரதமர் மோடி எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 16, 2025 17:56 IST

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும். 18-ம் தேதி (நாளை மறுநாள்) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும். மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா.



  • Oct 16, 2025 17:16 IST

    ஜாமின் ரத்து கோரி மனு - ஆம்ஸ்ட்ராங் மனைவி வழக்கு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள சதீஷ், சிவா ஆகிய இருவருக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Oct 16, 2025 17:11 IST

    ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைத்த மோடி

    ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ.13,340 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன்படி தொழில்துறை, மின்சாரம், சாலைகள், ரெயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.



  • Oct 16, 2025 17:05 IST

    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை- அறிவிப்பு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்  இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ” தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யக்கூடும். தமிழத்தில் அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என்றார்.



  • Oct 16, 2025 17:04 IST

    30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திருச்சி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Oct 16, 2025 16:51 IST

    குஜராத் அமைச்சரவை ராஜினாமா

    குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பதவியைத் தவிர்த்து மற்ற 16 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 17) புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 16, 2025 16:24 IST

    அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: இபிஎஸ்

    எத்தனை சக்திகள் ஒன்று கூடி வந்தாலும் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; திமுகவின் ஃபெயிலியர் மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி குத்தித் தற்போது பணியாற்றி அதிமுக ஆட்சி மலர உறுதியேற்போம்

    - அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தொண்டர்களுக்கு அக்கட்சிப் பொதுச்செயலாளர் கே.பி.பழனிசாமி கடிதம்



  • Oct 16, 2025 16:16 IST

    திமுக கூட்டணிக்கு சாதகம்

    திமுகவுக்கு போட்டியிட்டால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரியும்; அது திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பாக அமையும்; விஜய், சீமான் போன்று 4 முனை போட்டி உருவாகி இருப்பது திமுக கூட்டணிக்கு சாதகம்

    - நெல்லையில் துரை வைகை எம்.பி. பேட்டி



  • Oct 16, 2025 16:15 IST

    ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்படுமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு

    கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் நுகர்வோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கொள்கை. எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதி செய்தல், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவை மாறுபடலாம்.

    -நிதியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்.

    ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்ததாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது இந்தியா. 



  • Oct 16, 2025 15:50 IST

    விஷவாயு தாக்கி தொழிலாளி பலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், வீசி மோட்டூர் அருகே உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ராமன் (47) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • Oct 16, 2025 15:48 IST

    சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    மழை காலங்களில் பல புயல்கள் உருவாக வாய்ப்பு. எத்தனை புயல் உருவாகும் என்பது இப்போது சொல்ல முடியாது

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Oct 16, 2025 15:47 IST

    தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

    தீபாவளியை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 16) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    ரயில்கள் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    சிறப்பு ரயில்களின் விவரம்:

    நாளை (அக். 17):

    தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

    எழும்பூர் - மதுரை முன்பதிவில்லா (MEMU) எக்ஸ்பிரஸ்

    அக். 18:

    மதுரை - தாம்பரம் முன்பதிவில்லா (MEMU) எக்ஸ்பிரஸ்

    எழும்பூர் - மதுரை முன்பதிவில்லா (MEMU) எக்ஸ்பிரஸ்

    அக். 20:

    செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ்

    அக். 21:

    மதுரை - தாம்பரம் முன்பதிவில்லா (MEMU) எக்ஸ்பிரஸ்



  • Oct 16, 2025 15:44 IST

    மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்களின் பைபர் படகுகள் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



  • Oct 16, 2025 15:31 IST

    வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 16, 2025 15:22 IST

    கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% போனஸ்: அரசு

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

    கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படும் உபரித் தொகையை கணக்கில் கொண்டு மிகை ஊதியம் வழங்கப்படும்; உபரித் தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரிவோருக்கு 10% மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும் 

    - தமிழ்நாடு அரசு



  • Oct 16, 2025 15:16 IST

    கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை பிரதமரை வலியுறுத்திட வேண்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அக்கடிதத்தில், இலங்கை பிரதமரின் மூன்று நாள் புதுடெல்லிப் பயணம் அக்டோபர் 16–18, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இந்தப் பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், 2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினைகளைத் தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க இந்திய அரசின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருவதாகவும், இதற்காக, தான் பதினொரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதையும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இந்தச் சிறைப்பிடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த கீழ்கண்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து இலங்கைப் பிரதமரின் வருகையின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு:

    தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தீவு மத்திய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதன் விளைவாக, நமது மீனவர்கள் இப்போது தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழைவதாகக் கூறி அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்.

    இந்தச் சூழ்நிலையில், கச்சத்தீவை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் துயரமான பிரச்சினைகளைத் தீர்க்க இது மிகவும் முக்கியமானதுமாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவித்தல்:

    தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 76 மீனவர்களும் 242 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தைத் தணிக்க, அவர்களை விரைவாகத் தாயகம் திரும்பவும், அவர்களின் படகுகளை இலங்கை அரசிடமிருந்து விடுவிக்கவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கடலில் வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுத்தல்:

    இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுவதையும், இலங்கை நாட்டினரால் அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் குறித்தும் புகார் அளிப்பதாகவும், இந்தப் பிரச்சினையை திறம்பட தீர்க்க மேம்படுத்தப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை தேசியமயமாக்கியதன் தாக்கம்:

    இலங்கை மீன்பிடிச் சட்டத்தில் 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை தேசியமயமாக்க வழிவகுத்துள்ளால் அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. இது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தப் பிரச்சினையை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழுவிற்கு (JWG) புத்துயிர் அளித்தல்:

    மேற்குறிப்பிட்டுள்ள இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழு, சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து கூட்டப்படுவதில்லை. எனவே, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் கவலைகளை, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை உருவாக்க இந்த வழிமுறையை மீண்டும் புதுப்பிப்பது அவசியமாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினைகளினால் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் மூலம் விரைவான மற்றும் நீடித்தத் தீர்வை அடையும் நோக்கில், இவற்றை இலங்கை பிரதமரிடம் எடுத்துச் சென்று விவாதிக்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 16, 2025 14:25 IST

    கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

    கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பேருக்கு ரூ.44.11 கோடி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% வரை போனஸ் வழங்கப்படுகிறது.



  • Oct 16, 2025 13:41 IST

    ‘குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    ‘குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் | பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக இளையராஜா தரப்பு தெரிவித்த நிலையில், வழக்கின் விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



  • Oct 16, 2025 13:41 IST

    கரூர் நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி

    கரூர் நெரிசல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜாமின் மனுவை மனுதாரர் திரும்பி பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்தது.



  • Oct 16, 2025 12:14 IST

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 16, 2025 09:28 IST

    ஃபாஸ்டேக்கில் இலவசமாக ரூ.1,000!

    தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அசுத்தமான கழிப்பறைகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1,000 வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ராஜ் மார்க் யாத்ரா’ செயலியை (App) பதிவிறக்கம் செய்து அதில் புகைப்படத்துடன் புகார் அளித்தால், தகவல் அளிப்பவரின் வாகனத்தின் 'பாஸ் டேக்'கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும் என் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.



  • Oct 16, 2025 09:24 IST

    கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்!

    மலைப் பகுதியில் இரவு முழுக்க தொடர் சாரல் மழை பெய்த நிலையில் காலை முதல் கடும் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர் நிலவி வருகிறது.



  • Oct 16, 2025 09:24 IST

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 கூடி, ரூ.95,200க்கு விற்பனை!

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 கூடி, ரூ.95,200க்கு விற்பனையாகிறது. ஒருகிராம்ரூ.11,900க்குவிற்பனையாகிறது.

     



  • Oct 16, 2025 09:20 IST

    நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Oct 16, 2025 09:18 IST

    தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில்அக்டோபர் 16,17 தேதிகளில் 12 செ.மீமுதல் 20 செ.மீவரைமிககனமழைக்குவாய்ப்புஉள்ளதால்இந்தியவானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்தது. தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும்காரைக்கால்பகுதிகளில்இன்றுமுதல் 7 நாட்களுக்குமிதமானமழைக்குவாய்ப்புஎனவும்கணிக்கப்பட்டுள்ளது.

     



  • Oct 16, 2025 09:15 IST

    மடகாஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

    தென்கிழக்குஆப்பிரிக்கநாடானமடகாஸ்கரில்அதிபர்அரசைகவிழ்த்துவிட்டுராணுவம்ஆட்சியைகைப்பற்றியது. ஆட்சிக்கவிழ்ப்பைவழிநடத்தியதளபதிமைக்கேல்ராண்ட்ரியானிரினாபுதியஅதிபராகபொறுப்பேற்கவுள்ளார்.

     



  • Oct 16, 2025 08:44 IST

    2040ல் நிலாவில் இந்தியக் குழு : இஸ்ரோ நாராயணன் நம்பிக்கை..!

    மனிதர்களுடன்பயணிக்கக்கூடியககன்யான்திட்டத்தை 2027 ஆம்ஆண்டில்சாத்தியப்படுத்தவிரும்புகிறோம். 2040 ஆம்ஆண்டுஇந்தியர்களைநிலாவில்கால்பதிக்கவைப்போம்எனஇஸ்ரோதலைவர்நாராயணன்நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

     



  • Oct 16, 2025 08:23 IST

    ரேஷன் அரிசியை கடத்தும் வீடியோ - இருவரிடம் விசாரணை

    ஈரோடு அருகே ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசியைக் கடத்தும் வீடியோ வெளியான நிலையில் விற்பனையாளர் உள்பட இருவரைக் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 16, 2025 08:00 IST

    20 க்கும் மேற்பட்டோரை கடித்த நாய்

    சென்னை செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்ததாகப் புகார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் சாலையில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தப் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Oct 16, 2025 07:57 IST

    திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை

    திருச்செந்தூரில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழை. சிவன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.



  • Oct 16, 2025 07:54 IST

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஜாமீன் கோரி 8 பேர் மனு

    ஆம்ஸ்ட்ராங்கொலைவழக்கில்சிறையில்உள்ளமேலும் 8 பேர்ஜாமீன்கோரிசென்னைஅமர்வுநீதிமன்றத்தில்மனுஅளிக்கப்பட்டுள்ளது. 8 பேரின்ஜாமீன்மனுக்கள்சென்னைமுதன்மைஅமர்வுநீதிமன்றத்தில்இன்றுவிசாரணைக்குவருகிறது.

     



  • Oct 16, 2025 07:24 IST

    இன்று தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

    தமிழ்நாட்டில்இன்றுவடகிழக்குப்பருவமழைதொடங்குகிறது. மாநிலத்தின்பல்வேறுஊர்களிலும்மழைவெளுத்துவாங்கியது. தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம்மாவட்டங்களில்இன்றுமிககனமழைக்குவாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுஉள்ளிட்ட 22 மாவட்டங்களில்கனமழைபெய்யும்எனவும்வானிலைஆய்வுமையம்கணித்துள்ளது.

     



  • Oct 16, 2025 07:22 IST

    பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழைகாரணமாகநெல்லை, தென்காசி, தூத்துக்குடிஆகியமாவட்டங்களில்பள்ளிகளுக்குமட்டும்இன்றுவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும்பள்ளிகளுக்குமட்டும்விடுமுறைஅறிவித்துமாவட்டஆட்சியர்கள்உத்தரவிட்டுள்ளனர்.

     



  • Oct 16, 2025 07:20 IST

    ரஷ்ய எண்ணெய் வாங்க மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறார் மோடி - டிரம்ப்

    அமெரிக்கஅதிபர்ட்ரம்ப்பிரதமர்மோடியைஒருசிறந்தமனிதர்என்றுபாராட்டியுள்ளார். இந்தியாரஷ்யாவிடம்இருந்துஎண்ணெய்வாங்குவதைநிறுத்தும்என்றுமோடிஉறுதியளித்துள்ளார். உடனடியாகஇல்லை, ஆனால்விரைவில்இதுநடக்கும்என்றுட்ரம்ப்கூறியிருக்கிறார்.

     



  • Oct 16, 2025 07:18 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Oct 16, 2025 07:18 IST

    சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தீபாவளிபண்டிகையைமுன்னிட்டுதமிழ்நாடுமுழுவதும்இன்றுமுதல் 4 நாட்களுக்குசிறப்புபேருந்துகள்இயக்கப்படுகிறது. சென்னையில்இருந்துவழக்கமாகஇயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 760 சிறப்புபேருந்துகளும், பல்வேறுஇடங்களிலிருந்து 565 பேருந்துகளும்இயக்கப்படஉள்ளன.



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: