தீபாவளி பண்டிகை: மதுரை, நெல்லை, குமரி, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள்; முன்பதிவு தொடக்கம்

தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்; நெல்லை, குமரி, மதுரை, ஈரோட்டுக்கு எந்தெந்த தேதிகள் ரயில்கள் இயக்கப்படும்? முழு விபரம் இங்கே

தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்; நெல்லை, குமரி, மதுரை, ஈரோட்டுக்கு எந்தெந்த தேதிகள் ரயில்கள் இயக்கப்படும்? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
chennai delhi special train, special train ticket price

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில், சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மற்றும் ஈரோட்டிற்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

தீபாவளி பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனையடுத்து, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக, சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோட்டுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சென்னை – திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு ஏசி விரைவு சிறப்பு ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 28-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஏசி விரைவு சிறப்பு ரயில் (06073) புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

Advertisment
Advertisements

தாம்பரம் – மதுரை: மதுரையில் இருந்து அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, அதேநாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06075), மறுநாள் அதிகாலை 1.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

சென்னை – கன்னியாகுமரி: சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சிறப்பு ரயில் (06079) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 28-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06080) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். 

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதுதவிர, ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதன்படி ஈரோட்டில் இருந்து அக்டோபர் 30, 31, மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.55 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06094) புறப்பட்டு, அதேநாட்களில் முற்பகல் 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06093), அதே நாட்களில் இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Special Trains Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: