தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29-ம் தேதி, நவம்பர் 2-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, மறுமார்க்கமாக அக்டோபர் 31-ம் தேதி, நவம்பர் 4-ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என்றும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 24ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவை போத்தனூருக்கு வரும் அக்டோபர் 29ம்தேதி மற்றும் நவம்பர் 2ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயில் அக்டோபர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 2ம் தேதி அன்று இரவு 7மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 3.15க்கு கோவை போத்தனூரை சென்றடையும். மறு மார்க்கமாக அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 4ம் தேதிகளில் நள்ளிரவு 12.15க்கு ரயில் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.15க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஆறும், 8 படுக்கை வசதி பெட்டிகளும், ஒரு பொதுப்பெட்டி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29, நவ.5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.
அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.28, நவ.4, 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.