தீபாவளியையொட்டி, தமிழ்நாட்டில், இந்தாண்டு, 325 கோடி ரூபாய் அளவுக்கு, மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி மது விற்பனை:
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதற்காக அனைத்து மதுபான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில், இந்தாண்டு, 325 கோடி ரூபாய் அளவுக்கு, மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கடந்தாண்டை விட 43 கோடி ரூபாய் கூடுதலாகும். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, 282 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடைபெற்றது.
இந்தாண்டு, தீபாவளிக்கு முதல் நாள் 152 கோடி ரூபாய்க்கும், பண்டிகை நாள் அன்று, 173 கோடி ரூபாய்க்கும் என, மொத்தம் 325 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்தாண்டை விட, இந்தாண்டு, தீபாவளியையொட்டி, 43 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக, மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.