ஆம்னி பஸ்களில் குறையாத கட்டணம்... 6 மடங்கு வரை உயர்வு; அதிர்ச்சியில் பயணிகள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்னர் அறிவித்திருந்த குறைவான கட்டணங்களை மீறி, பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது சொந்த ஊர் செல்லும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்னர் அறிவித்திருந்த குறைவான கட்டணங்களை மீறி, பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது சொந்த ஊர் செல்லும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
omni buses

ஆம்னி பஸ்களில் குறையாத கட்டணம்... 6 மடங்கு வரை உயர்வு; அதிர்ச்சியில் பயணிகள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்னர் அறிவித்த கட்டணங்களைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கட்டணங்களைக் குறைப்பதாக அறிவித்த பின்னரும், முக்கிய நகரங்களுக்கான பயணச் சீட்டு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், சொந்த ஊர் செல்லத் திட்டமிட்ட பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கட்டணங்களைக் குறைப்பதாக அறிவித்திருந்தனர். இருப்பினும், தற்போது பல்வேறு நகரங்களுக்கான பயணக் கட்டணம் அதிகரித்தே காணப்படுகின்றன.

Advertisment
வழித்தடம்அறிவிக்கப்பட்ட கட்டணம்இன்றைய கட்டணம் (அக்.17)நாளைய கட்டணம் (அக்.18)
மதுரைரூ. 2,869ரூ. 5,000ரூ. 7,555 வரை
கோவைரூ. 2,770ரூ. 3,700ரூ. 4,000 வரை
நாகர்கோவில்ரூ. 3,150ரூ. 3,560ரூ. 3,999 வரை
நெல்லைரூ. 3,180ரூ. 3,390ரூ. 3,499 வரை
தூத்துக்குடிரூ. 2,964ரூ. 2,660 -

விதிவிலக்காக, தூத்துக்குடிக்கு நிர்ணயித்த அதிகபட்சக் கட்டணமான ரூ.2,964-ஐ விடக் குறைவாக, ரூ.2,660 மட்டுமே அதிகபட்ச கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிக கட்டண வசூல் குறித்து புகார்: அதிக கட்டணப் புகார் எழுந்த போது, கட்டணத்தை குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அதைவிட மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளின் இந்த திடீர் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்கள், கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாகப் புகார் அளிக்க, சென்னை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 5161 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்லப் பெரிதும் நம்பியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் இந்த அதீத கட்டண வசூல், பயணிகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடும் பேருந்துகளின் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: