k-veeramani | l-murugan | tiruchirappalli | மத்திய அரசுக்கு எதிராக, திருச்சி சிந்தாமணி அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர்கள், புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மாநில நிர்வாகி அஷ்ரப்அலி, மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மதிவாணன், இந்திய ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும்; அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது என்ற கேள்விக்கு ? ஒரு சிறு திருத்தம் 35 சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் பெட்டியை திறந்து பார்த்தால் 40ம் இருக்கும். அதேபோன்று இந்தியா கூட்டணி வெற்றி பெரும். குறிப்பாக மணிப்பூருக்கே போகாத ஒரு பிரதமரை பெற்று இருக்கிறோம்.
பாஜக சார்பாக அண்ணாமலை எண் மண்- எண் மக்கள் நடைபயணம் நிறைவு விழாவில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் இந்த நிறைவு விழா அண்ணாமலையை வழி அனுப்பும் விழாவாக இருக்கும் என்றார்.
திமுக கூட்டணி , கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணி ஆகும். பதவிக்காக கூட்டணி அல்ல பலர் எங்கள் கூட்டணியில் சேர்வதற்காக கதவைத் தட்டி வருகின்றனர். மேலும், கருத்து கணிப்பை தாண்டி தேர்தலிலே இந்தியா முழுவதும் எங்கள் கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். ஊடகங்கள் மாற்றிச் சொன்னாலும் இது நடைமுறையில் இருக்கும். கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தமிழ்நாட்டில் கோடான கோடி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு ரூபாய் கூட பெற்று கொடுக்கவில்லை.
மோடியிடம் பொங்கல் கொடுத்தால் மட்டும் போதாது, அந்த நேரத்திலாவது பணம் வேண்டும் என கேட்டிருக்க வேண்டும். நாங்கள் தான் வாங்கிக் கொண்டு வந்தோம் என்று சொல்லி இருந்தால் அந்த பதவிக்கு தகுதி உள்ளவர். அது செய்யாதவரை தகுதி இல்லாதவர்.
இது சாதியை வைத்து யாரும் பேசவில்லை என்பதை உணரவேண்டும். அவர் திறமையை வைத்தது செயலின்மையை வைத்து தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உண்டு செய்கிறார்களா, அடுத்த கட்டம் பாலு என்ன சாதி என்று ஆரம்பிப்பார்கள். இத்தகைய செயல்களை எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள்.
இதையெல்லாம் நாங்கள் செய்தோம் என சொல்ல முடியாதவர்கள் ஜாதி என்பதுக்குள் புகுந்துள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, பிஜேபியின் வித்தை ஆகும். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதன் நோக்கத்தை வேறு பக்கம் திசை திருப்புவார்கள் அதற்கு அடையாளம் தான் இந்த சாதி பிரச்சினை.
தமிழ்நாட்டில் பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகள் எந்த கூட்டணி சேராமல் அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு?? ஏலம் போடும் அரசியலை கொஞ்சம் மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.