27 ஏக்கர்... ரூ5000 கோடி... 70,000 பேருக்கு வேலை: உருவாகிறது புதிய ஐடி பார்க்

இதுவரை டி.எல்.எஃப் நிறுவனம் 153 ரியல் எஸ்டேட் திட்டங்களை 331 மில்லியன் சதுர அடியில் நிறைவேற்றியுள்ளது.

DLF Downtown project in Taramani சென்னை தரமணியில் 27 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக இருக்கும்  ஐ.டி. பூங்காவிற்கு நேற்று அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வில் அவருடன் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். 6.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த பூங்கா டி.எல்.எஃப் நிறுவனத்தால் கட்டப்படுகிறது. 2008ம் ஆண்டு தமிழகத்தில் இந்த ஐ.டி. பூங்கா கட்டுவதற்கான ஏலத்தை வென்றது இந்நிறுவனம். பிற்கு பல்வேறு சூழல் காரணமாக தன்னுடைய பணியை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிக்க, தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது.

தொழில்நுட்ப தலைநகரம்

முந்தைய பிரச்சனைகள் எல்லாம் சீரடைந்து தற்போது இந்த பணி துவங்கியுள்ளது. டி.எல்.எஃப் டவுன்டவுன் கூர்கானுக்கு அடுத்தபடியாக சென்னையில் ஐ.டி. பார்க்கினை கட்ட உள்ளது. தமிழக அரசின் டிட்கோவும் (Tamil Nadu industrial development corporation (TIDCO) டி.எல்.எஃப்பும் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.

குத்து விளக்கு ஏற்றி பேசிய முதல்வர் “ஜெ.வின் அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சியால் தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், ஒரே ஆண்டில் 59 திட்டங்களை 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து பெற்றது குறித்தும் பேசினார். தமிழகத்தில் தற்போது 213 திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் இருந்து வருகிறது என்றும் இதுவரையில் ரூ. 19 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ந்றும் அவர் கூறினார்.

70 ஆயிரம் நபர்களுக்கு வேலை

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகராக உயரும் அளவிற்கு வளர்ச்சியை கண்டடைந்துள்ளது, மிகப்பெரிய நிறுவனங்களின் கிளைகள் இங்கு சென்னையில் செயல்பட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களும் தங்களின் கிளைகளை துவங்க விருப்பம் தெரிவித்து வருகின்றன.

அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதிய ஐ.டி.. வளாகம் அமைக்கப்பட வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. இதற்கான செயல்வடிவமே தற்போதைய டி.எல்.எஃப் ப்ரோஜெக்ட். தரமணியில் 27.04 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றும் நேற்று முதல்வர் பேசியுள்ளார்.

டி.எல்.எஃப்

ஏற்கனவே 15 ஆண்டுகளாக டி.எல்.எஃப் சைபர் சிட்டி சென்னையில் இயங்கி வருகிறது. மனப்பாக்கத்தில் இருக்கும் தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி. பூங்கா இதுவாகும். தற்போது புதிதாக கட்டப்படும் ஐ.டி.பூங்காவில் முதலில் 2.5 மில்லியன் சதுர அடியில் தான் கட்டிட வேலைகள் துவங்கும். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்த கட்டிட வேலைகள் முடிவுக்கு வரும்.

டி.எல்.எஃப் நிறுவனத்தின் தலைவர் மோஹித் குஜ்ரால் இது குறித்து பேசுகையில் “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது சென்னை. இங்கு இருக்கும் திறமை மிக்கவர்களை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக நாங்கள் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

கூர்கான், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஐ.டி. நிறுவனங்கள் மூலமாக டி.எல்.எஃப் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வாடகை வருமானத்தை ஈட்டுகிறது. இதுவரை டி.எல்.எஃப் நிறுவனம் 153 ரியல் எஸ்டேட் திட்டங்களை 331 மில்லியன் சதுர அடியில் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க : 43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி!

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close