விஜயகாந்த் நலமாக இருக்கிறார் : தேமுதிக அறிக்கை

உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் சென்னை  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

விஜயகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைபாடு காரணமாக மிக சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அவர் அமெரிக்காவில் இருக்கும் போது அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

அங்கு பரிசோதனை முடிவடைந்த பிறகு, சென்னை திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - தேமுதிக அறிக்கை

Advertisment
Advertisements

எப்போதும் நடக்கும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், எந்த வித வந்ததிகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலாதாவின் சகோதரரும், கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கை ஒன்றும் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினை பொது மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் சுதீஸ் வெளியிட்டார்.

விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி - தேமுதிகவின் அறிக்கை

Vijayakanth Dmdk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: