scorecardresearch

‘சாபம் விட்ட ஜெயலலிதா போயிட்டார்… கேப்டன் சிங்கம் மாதிரி இருக்கிறார்’: பிரேமலதா அதிரடி பேச்சு

சாபம் விட்ட ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? கேப்டன் முதுகில் நம்பினவங்க எல்லாம் குத்திட்டாங்க – கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

‘சாபம் விட்ட ஜெயலலிதா போயிட்டார்… கேப்டன் சிங்கம் மாதிரி இருக்கிறார்’: பிரேமலதா அதிரடி பேச்சு

சாபம் விட்ட ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? கேப்டன் முதுகில் நம்பினவங்க எல்லாம் குத்திட்டாங்க என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க முன்னாள் கொறடா மரணம்; இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ் திருச்சி வருகை

இது காசு கொடுக்காம தானா சேர்ந்த கூட்டம். இப்படி கூட்டம் சேர்வது தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மட்டும்தான். நாம ஆளும் கட்சியும் இல்ல, ஆண்ட கட்சியும் இல்ல. எதிர்கட்சியாக ஆனோம், ஆனால் எல்லாரும் துரோகம் பண்ணிட்டு, கேப்டன் முதுகில் குத்திட்டுப் போயிட்டாங்க. அவங்க மட்டும் இப்பவரை கேப்டன் கூட இருந்திருந்தா, கேப்டன் உடல் நிலைக்கு எதுவும் ஆகி இருக்காது, இந்த கட்சியையும் யாரும் தொட்டுப் பார்த்திருக்க முடியாது. கேப்டன் நல்லவர், குழந்தை மாதிரி, எல்லாரையும் நம்பினார், அதனால் முதுகில் குத்திட்டாங்க, அவங்க யாரும் இன்னைக்கு நல்லா இல்ல.

சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, கேப்டன் குறித்து என்னவெல்லாம் பேசினாங்க. நான் எதையும் மறக்கவில்லை. கேப்டன் அப்போது சட்டசபையில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயலலிதா, இனிமேல் உங்களுக்கு இறங்கு முகம் தான் என்று  சொன்னாங்க. கேப்டனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, தேர்தல் தோல்வி எல்லாம் உண்மைதான் என்றாலும், கேப்டன் இன்னைக்கும் சிங்கம் மாதிரி நம்ம கூட இருக்காரு. பெருசா சாபம் விட்ட நீங்க 68லே போயி சேர்ந்துட்டிங்கல்ல. ஆனா கேப்டன் யாரையும் சபிக்கல, யாரையும் விரோதியாக பார்க்கவில்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmdk leader premalatha vijayakanth slams jayalalitha in kanniyakumari

Best of Express