பிரபல நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் (71) உடல்நலக் குறைவால் இன்று (டிசம்பர் 28) மரணம் அடைந்தார். மியாட் மருத்துவமனையில் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
நேற்று அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. விஜயகாந்த மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வீட்டில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் மரணம் குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“