/tamil-ie/media/media_files/uploads/2020/10/New-Project-2020-10-06T222109.206-1.jpg)
DMDK party chief Vijayakant discharged from private hospital in Chennai : செப்டம்பர் 23ம் தேதி அன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மியாட் மருத்துவமனைக்கு சென்றார் தேமுதிக தலைவர். அவருக்கு லேசான கொரோனா தொற்றுகள் இருந்த காரணத்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவர்கள் இருவரும் வீடு திரும்பினர்.
கொரோனா சிகிச்சை முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு கதிரியக்க பரிசோதனைகள் தரப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார். #MIOT#Vijayakant#DMDKpic.twitter.com/u8c1ud3JxD
— IE Tamil (@IeTamil) October 9, 2020
ஆனால் மீண்டும் விஜயகாந்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட, அக்டோபர் மாதம் 06ம் தேதி அன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாம் கட்ட பரிசோதனைகளுக்காக செல்கிறோம் என்று தேமுதிக தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அம்மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.