Advertisment

அமைச்சரே சொல்கிறார்... இந்த ஒரு சான்று போதும் தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய - பிரேமலதா காட்டம்

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்பதால் அதை வாங்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்க செல்கிறார்கள் என்று அமைச்சரே சொல்கிறார் என்றால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு இது ஒரு சான்று போதும் என தே.மு.தி.க பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
DMDK Premalatha Drum

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்பதால் அதை வாங்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்க செல்கிறார்கள் என்று அமைச்சரே சொல்கிறார் என்றால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு இது ஒரு சான்று போதும் என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 69 உயிர்களை இழந்துள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த  அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மிக ஒரு மோசமான பதிவை பதிய வைத்ததை தே.மு.தி.க சார்பாக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் முன்பு மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு என்கின்றார் சரக்கு பற்றி பேசுகிறார், கிறுக்குத்தனமாக பேசுகிறார் எனவும் 69 உயிருக்கும் முழு சாட்சி நீங்கள்தான் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதைத்தான் இங்கு பார்க்க முடிகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.

கள்ளச்சாராயம்  வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்றும் அதில் தரம் இல்லை என்பதை மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் யார் கள்ளச்சாராயம் நோக்கி செல்ல வைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டார்.

குடியை கொடுத்து கோடியை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள் எனவும் கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல்  பொள்ளாச்சியிலும் ஒரு நிகழ்வு நடந்தது உண்மையில் மனவருத்தமாக உள்ளதாகவும் இது தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நிலையில்  பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாய் அடைத்து விடுகிறார்கள் என்றும் விமர்சித்தார். 

ஆனால், மூத்த அமைச்சர் நேற்று சட்டசபையில் சொல்லி உள்ளார், அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார். பிறகு எதற்கு இந்த ஆட்சி எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி டாஸ்மார்க் மட்டும் வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா என்ற மக்கள் கேள்வியை நான் எழுப்புகிறேன் என்றார். 

மேலும், கஞ்சாவால் மட்டும் அழிவு கிடையாது இங்கே ஹெராயின் போன்ற மிகக் கொடுமையாக இன்றைக்கு பள்ளி படிக்கின்ற மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அத்தனை பேரும் பாதிக்கின்ற ஒரு நிலைமை இருப்பதாக ஆளுநர் மன வருத்தத்தோடு பதிய வைத்துள்ளார் எனவும் தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பதை தமிழக மக்கள் நீங்கள் உணர வேண்டும். எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



விருதுநகரில் பட்டாசு ஆலையில் 4 உயிர்கள் பலியாகி உள்ளது, சென்னையில் கழிவுநீருடன்  குடிதண்ணீர் கலந்து 11 வயது குழந்தை ஆபத்தான நிலைமையில் அட்மிட் செய்துள்ளனர், அந்த குழந்தையை அட்மிட் செய்வதற்காக மருத்துவமனை கொண்டு சென்றால் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர் இதை எவ்வளவு மன வருத்தத்துடன் நாம் சொல்ல வேண்டி உள்ளது. இங்கே உயிருக்கு எந்த மரியாதையும் கிடையாது பணம் மட்டுமே பிரதானமாக உள்ளது என்றும் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட 2000 ரூபாய் கொடுத்தால் தான் அட்மிட் செய்வேன் என்று சொன்னால் இந்த ஆட்சியின் அவல நிலை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சியும்  எந்தவித செயல்பாடுகள் இல்லாமல் முடங்கியுள்ளதாகவும் கூறினார். மீண்டும் ஒரு மரணம் கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் வரக்கூடாது என்ற நோக்கத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய்  அபராதம் விதிக்கப்படும் என்று  தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும் என்றும் இவ்வளவு ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல இப்போதுதான் முதல்முறையாக கள்ளச்சாராயம்  செய்தது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் இது உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் தான் என்றார். 

கள்ளக்குறிச்சியில் மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றும் இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தான் என்றும் அவர் பதவி விலகினால் தான் இதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும், இதற்கு முழு பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும் இனி ஒரு மரணமும் நிகழக் கூடாது. இது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை நான் கூறிக் கொள்கிறேன் என்றார். டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்பதால் அதை வாங்க முடியவில்லை என்று கள்ளச்சாராயம் வாங்க செல்கிறார்கள் என்று அமைச்சரே சொல்கிறார் என்றால் இது ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு என்றும் நாம் இழக்க போகின்றோம் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் இருக்கின்றது இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தவிர அரசு ஆட்சியாளர்கள் காவல்துறை மக்கள் என அனைவரும் இணைந்தால் தான் இது சாத்தியமடையும் என குறிப்பிட்டார்.

உண்மையிலேயே அந்தக் காலத்தில் இருந்து பார்த்தோம் என்றால் கல்லு என்பது விவசாயத்தையும் ஊக்கிவிக்கிறது இவர்களுடைய தேவையும் நிறைவேற்றுகிறது நான் இப்போது கோவையில் உள்ளேன் கொங்கு மண்டல மக்கள் விவசாயிகள் பலபேருடைய பல நாள் கோரிக்கை எது இது போன்ற விஷ சாராயம் டாஸ்மார்க் கடையை விட கல்லு மிகவும் நல்லது உயிர் கேடு எதுவும் இருக்காது மிகவும் உடலுக்கு நல்லது என்ற ஒரு கருத்து உள்ளது நிச்சயம் அரசியலமை பரிசீலனை செய்ய வேண்டும் 



கள் இறக்கி அதை செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித இன்கம்  கிடையாது அதனால் அதை ஊக்குவிக்க மாட்டேன் என்கின்றார்கள் இப்போது 45 ஆயிரம் கோடி என்கிறார்கள் அடுத்தது ஐம்பது 55 ஆயிரம் கோடி என்ற இலக்கை நோக்கி உள்ளார்கள் இதுதான் இந்த அரசாங்கத்தின் அவல நிலை மக்களின் உயிரை பயணம் வைத்து தான் இந்த அரசு நடக்கிறது போன முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரும் அவரது மகனும் மதுவை ஒழிப்போம் என்று வீட்டு முன்பு நின்று கூறினார்கள் இப்போது ஏன் மதுரை ஒலிக்கவில்லை இப்போது யார் ஆட்சி நடந்து கொண்டுள்ளது இப்போது ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை ஏன் யாரையும் நேரில் சந்திக்கவில்லை இதற்கு முழு பொறுப்பு ஏற்று முதல்வர் மக்களை சந்திக்க வேண்டும் அல்லவா 

கனிமொழி அவர்கள் தமிழகத்தில் தான் அதிக இளம் விதவைகள் இருக்கின்றார்கள் என்று கூறினார் ஆனால் இப்போது ஏன் பயந்து கொண்டு ஓடுகிறார் கனிமொழி இந்த ஆட்சியின் அக்கறை என்ன ஆனது கலைஞர் இருந்தபோது முழு மதுவிலக்கு என்று கூறினார் ஸ்டாலின் அவர்களும் இதே வார்த்தையை கூறினார் உதயநிதி வரும்போது இவரது ஆட்சி வந்ததும் முழு மதுவிலக்கு என்று கூறினார் இப்போது மூன்று வருடம் கலந்து 4 ஆண்டுகளை நோக்கி செல்கிறது 

ஸ்டாலின் நாங்கள் ஓடி ஒளியவில்லை எதையும் மறைக்கவில்லை என்று கூறுகிறார் உண்மையிலேயே ஓடி ஒளியவில்லை என்றால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிபடி முழு மதுவிலக்கை கொண்டு வந்து கள்ளச்சாராயம் இனி எங்கும் காய்ச்சப்படவில்லை என்பதை சொல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்

நீட் தேர்வு வேண்டாம் என்று ஆர்வம் முதலில் சொல்லிக் கொண்டுள்ளோம் மத்திய அரசு நீட் தேர்வை நாங்கள் எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர் அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை கேட்டு ஒரு தெளிவான கருத்தை எடுக்க வேண்டும் இதை வைத்து அரசியல் தான் செய்து கொண்டுள்ளனர் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை அதனால் ஒரு நிலையான நல்ல முடிவை மாணவர்கள் சார்ந்து எடுக்க வேண்டும் 

சட்டமன்றம் நடப்பது எதற்காக மக்களின் பிரச்சனையை பேசுவதற்கு தான் மக்களுடன் வழிபாட்டில் தான் அந்த சட்டசபை நடக்கிறது அங்கு மக்கள் பிரச்சனையை பேசக்கூடாது ஏதாவது பேசினால் அவர்களை அவை காவலர்களை வைத்து வெளியில் இழுத்துச் செல்வது எந்த வகையில் நியாயம் இதே திமுக இன்றைக்கு சொல்கிறார்கள் விளம்பரம் தேடுவதற்கு தான் சட்டசபையில் கலந்து கொள்கிறார்கள் என்று 

கடந்த முறை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை வெளிநடப்பு செய்தது அவை நடக்க விடாமல் தடுத்துள்ளார்கள் உச்சபட்சமாக சபாநாயகர் தனபாலின் இருக்கை சென்று   அவர்களும் இன்னொரு எம்எல்ஏவும் உட்கார்ந்து அட்ராசிட்டி செய்தார்கள் அதிமுக அதையெல்லாம் செய்யவில்லையே கள்ளச்சாராயம் விவாகரத்தை பேச வேண்டும் என்று சொல்லி தான் கேட்டார்கள் அதற்கே அனுமதி இல்லை உண்மையிலேயே ஜனநாயகம் படுகொலைக்கு தள்ளப்பட்டுள்ளது மீண்டும் ஒரு எமர்ஜென்சி ஆட்சி போல தான் நடந்து கொண்டுள்ளது, இதுதான் உண்மை. நிச்சயம் மக்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இன்றைக்கு பெருமை பேசுகிறார்கள் கூலி சேதாரம் இல்லாமல் 40க்கு 40 வந்துள்ளது அடுத்தது 200க்கு 200 நாங்கள்தான் விக்கிரவாண்டி தேர்தலில் அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் தவிர அடுத்த தலைமுறையை யோசிக்கின்ற கட்சியாக இன்றைக்கு தி.மு.க இல்லை. அவர்கள் குடும்பத்தை மற்றும் தலைமுறையை பார்லிமென்டில் பதவி கேட்கிறார்கள் அதையே நிலை நிறுத்துகிறார்கள், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிர்காலத்திற்கு என்ன விட்டு செல்கிறார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்.

ஒரு பக்கம் மணல் கொள்ளை, ஒரு பக்கம் கனிம வள கொள்ளை, ஒரு பக்கம் டாஸ்மார்க், ஒரு பக்கம் கள்ளச்சாராயம், ஒரு பக்கம் கஞ்சா போதை விற்பனை எங்கும் வேலை கிடையாது, இப்படி சென்று கொண்டிருந்தால் எப்படி சரியாக வரும்?

நேற்றைக்கு விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்துள்ளது. அங்கு பெண்கள் பேசும் போது மிகவும் சிரமமாக இருக்கும் பட்டாசையும் நெருப்பையும் பார்த்து தான் பிழைப்பு நடத்த வேண்டி உள்ளத. அனைவரும் இப்படி இருந்தால் விவசாயமும் எங்களிடம் இல்லை. எங்களுக்கு என்ன வாழ்வாதாரம் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். முதல்வர் துபாய் போன்ற பல நாடுகள் சென்றார், எதற்கு பல முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினார். இன்றைக்கு அமெரிக்கா செல்கிறாராம், எதற்கு என்றால் முதலீடுகளை கவர்வதற்கு என்று கூறுகிறார். பிறகு எதற்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனை முறை முதலீடுகளை கொண்டு வந்தார்கள் என்று வெள்ளை அறிக்கை சொல்ல வேண்டும். 

நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் மக்களுக்காக நான் பேசுகிறேன், விழிப்புணர்வோடு இருங்கள் இனிவரும் காலம் மக்களுக்காக ஒரு நல்ல ஆட்சி மலர நீங்கள் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவது கேப்டன் தான், இன்றைக்கு விஜய் அவர்கள் செய்து வருகிறார். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment