சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் - உற்சாகத்தில் தே.மு.தி.க தொண்டர்கள்!

தங்கள் தலைவர் சிகிச்சை முடிந்து திரும்புவது தே.மு.தி.க-வினரிடையே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்றுவரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், வரும் சனிக்கிழமை சென்னை திரும்புகிறார்.

குரல் மற்றும் உடல்நிலை பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். தற்போது இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், அனைத்து மேல் சிகிச்சைகளும் முடிந்து பூரண நலம் பெற்று வரும் 16-ம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புவதாக, தே.மு.தி.க தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே தமிழகத்தில் வரும் பொதுத்தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் தீவிரமாகியுள்ள நிலையில், விஜயகாந்த் விஜயம் செய்தவுடன் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijayakanth Returns to Chennai

 

தவிர, தங்கள் தலைவர் சிகிச்சை முடிந்து திரும்புவது தே.மு.தி.க-வினரிடையே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close