Advertisment

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர் வைக்க மாட்டோம்.. திமுக சார்பில் பிரமாண பத்திரம்!

அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk affidavit files

dmk affidavit files

கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர், கட் அவுட், பிளக்ஸ் போர்டு ஆகியவை வைக்க கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Advertisment

பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவிற்கு செப்டம்பர் 12ஆம் தேதி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

மறுநாள் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் வழக்கறிஞர்கள் லக்‌ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் வைத்த முறையீட்டை விசாரித்தனர். அதனுடன் விதிமீறல் பேனர்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறிடிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பேனர் வைக்க கூடாது என கட்சி தலைவர்கள் தங்களின் தொண்டர்களுக்கு அறிவித்தால் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிவிப்பை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர் விதிமீறல் பேனரை தடுக்காத அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், சுபஸ்ரீ குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு அவை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வின் சார்பில் இன்று பிரமாணபத்திரத்தை அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ளார். அதில், 2017 ஜனவரி 29ஆம் தேதி திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அல்லது பிற நிகழ்சிகளுக்கு சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் வைக்க கூடாது என எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்பின்னர், 2018 ஜூன் 19ஆம் தேதி திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்வமிகுதியால் சிலர் பேனர் வைப்பது தொடர்வதாகவும், அதையும் தவிர்க்க அறிவுத்தபட்டுள்ளதாகவும் பிராமணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment